10 செகண்ட் ஸ்டோரிகள்

நான் ஆனந்த விகடனுக்கு அனுப்பி நிராகரிக்கப்பட்ட 10 செகண்ட் ஸ்டோரிகளை இங்கே பகிர்கிறேன். படித்து பாருங்கள், உங்களுக்கு பிடிக்கலாம்!
 
 எந்திரன் 7.0
டைம் மெஷினை கண்டுபிடித்து விட்டு சந்தோஷப்பட்ட Dr. வசீகரன், தான் வாழ்ந்த காலமான 2555 இல் இருந்து ஃபோன் போன்ற டேப்லெட் போன்ற பொருட்களை 2000 களில் வாழ்ந்த மக்களிடம் விற்று அதற்கு பதிலாக பூக்களையும் செடிகளையும் வாங்கி சென்று சனாவுக்கு பரிசளித்தார்.
 
ரோமிங்
புதிதாய் கண்டறியப்பட்ட கிரகத்தில் வந்து இறங்கியவன் செல் போன் ‘ரோமிங்’ என்றது.
 
தங்கமகன் 
தன் தந்தையை விழுங்கிய விராலுடன் சண்டையிட்டு அவரை காப்பாற்ற, அந்த விராலை விழுங்கிய கெண்டை மீனின் வாய்க்குள் நுழைந்தது குட்டி மீன்.
 
தொலைவில் 

ஊதா நிற ரோஜாவை பறித்து தன் மஞ்சள் நிற கூந்தலில் சூடிக்கொண்டாள் சாம்பல் நிற கிரகத்தின் உலகழகி.

 

ரத்தம் 

ஒரு கோடி ரூபாய் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அதில் ரத்தம் படிந்திருந்த நோட்டுக்களை தனியே வைத்தான் ராமன்.